கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி இறந்தார்.;
காரையூர்:
காரையூர் அருகே கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 45). விவசாயி. இவர் கொன்னையம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குடிப்பதற்காக குடத்தில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி அவரை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். அப்போது அவர் தலையில் அடிபட்ட நிலையில் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து காரையூர் போலீசார் வெள்ளைச்சாமி உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.