வீட்டு சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி

வீட்டு சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலியானார்.;

Update:2023-03-08 01:16 IST

லால்குடியை அடுத்த பூவாளூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் மோகன் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் லால்குடி ஆங்கரை காமராஜர் தெருவை சேர்ந்த சீராளன் என்பவரது பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, திடீரென்று சுவர் இடிந்து மோகன் மீது விழுந்தது. இதில் சுவற்றின் அடியில் சிக்கி மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்