சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலை;

Update:2022-10-11 17:10 IST

அவினாசி

அவினாசி கோவை செல்லும் மெயின்ரோட்டில் ஆட்டையாம்பாளையம் பகுதியில் நால்ரோடு சந்திப்பு ரவுண்டான உள்ளது. வேலாயுதம்பாளையத்திலிருந்து ஆட்டையாம்பாளையம் செல்லும் ரோட்டில் தினமும் ஏராளமான இருசக்கர வாகனம் மற்றும் கார், வேன், மினி பஸ்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் குழாய் பதிப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பள்ளம் தோண்டப்பட்டபோது குண்டும் குழியுமாக மண்ரோடாக மாறியது. கடந்த சில தினங்களாக அவினாசி சுற்றுவட்டாரப்பகுதியில் விடிய விடிய மழை பெய்து வருவதால்அந்த ரோட்டில் பள்ளமான பகுதிளில் மழைநீர் குட்டைபோல் தேங்கி ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கி தினறிய படி சிரமத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. மேலும் சிலர் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தும் உள்ளனர். எனவே சேறும் சகதியுமான அந்த ரோட்டை விரைந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வாகன ஒட்டிகளின் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்