மது விற்ற முதியவர் கைது

பள்ளிபாளையத்தில் மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-12-11 00:15 IST

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு பகுதியில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ராஜா (வயது 60) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்