வேன் கவிழ்ந்து வாலிபர் பலி

வாடிப்பட்டி அருகே வேன் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.;

Update:2023-09-18 01:40 IST

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செல்வகுமார் (வயது 33). இவரை கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து காணவில்லை என்று கம்பம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை பழனிச்சாமி புகார் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திண்டுக்கல்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டபுலி நகர் பஸ் நிறுத்தத்தில் செல்வகுமார் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக காய்கறி லோடு ஏற்றி வந்த வேன் இடது பின்புற டயர் பஞ்சரானதால் நிலை தடுமாறி கவிழ்ந்தது. அந்த இடிபாடுகளுக்குள் சிக்கி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்