ஆனைமலை
ஆனைமலையை அடுத்த சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 72). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பாக்கு பயிரிட்டுள்ளார். அதில் இருந்து அறுவடை செய்த பாக்கு காய்களை குடோனில் இருப்பு வைத்திருந்தார். அங்கு ஒரு மூட்டை 45 கிலோ வீதம் 500 மூட்டைகளை அடுக்கி வைத்தார். அதில் 17 மூட்டைகளை மர்ம ஆசாமி திருடி சென்றதாக தெரிகிறது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தர்மராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.