சிதம்பரத்தில் உள்ளடீக்கடையில் ரூ.18 ஆயிரம் திருட்டு

சிதம்பரத்தில் உள்ள டீக்கடையில் ரூ.18 ஆயிரம் திருட்டு போனது.;

Update:2023-03-19 00:15 IST


சிதம்பரம், 

சிதம்பரம் அடுத்த வயலூர் போக்குவரத்து நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 63). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சாத்தப்பாடி தபால் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு டீக்குடிக்க வந்த நபர், நாகராஜனின் கவனத்தை திசைதிருப்பி விட்டு, கல்லாபெட்டியில் இருந்த ரூ. 18 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டார். அந்தநபர் அங்கிருந்து சென்ற பின்னர் தான், பணம் திருடு போனது, நாகராஜனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்