பெண் வரி வசூலரிடம் ரூ.1 லட்சம் திருட்டு

கோவைக்கு பஸ்சில் வந்த போது இடிகரை பேரூராட்சி பெண் வரி வசூலரிடம் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடினர்.;

Update:2023-03-07 00:15 IST

கோவைக்கு பஸ்சில் வந்த போது இடிகரை பேரூராட்சி பெண் வரி வசூலரிடம் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் வரி வசூலர்

கோவை அருகே தெலுங்குபாளையம் பனைமரத்தூரை சேர்ந்த வர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி அமுதா (வயது 55).

இவர் கோவையை அடுத்த இடிகரை பேரூராட்சியில் வரி வசூல ராக பணியாற்றி வருகிறார்.

2022-23-ம் நிதியாண்டு வருகிற 31-ந் தேதி முடிவடைவதால், அமுதா, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர், சொத்துவரி, உள்ளிட்ட வரியினங்களை வசூலித்து வந்தார்.

அவர், நேற்று முன்தினம் வரி வசூல் தொகை ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு தனியார் பஸ்சில் கோவை ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்துக்கு வந்து இறங்கினார்.

அப்போது அவர், தனது கைப்பையை சரிபார்த்த போது ஜிப் திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே பார்த்தபோது ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இது குறித்து அமுதா அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமுதாவிடம் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்