தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது;
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூரில் வால்ெநடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.