கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.;

Update:2023-01-05 23:48 IST

கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சவுந்தரநாயகியுடன் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சவுந்தரநாயகிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சியும் பால், பழம் வழங்கும் நிகழ்ச்சியும், மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, பட்டாடை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்