திருப்பள்ளியறை விஸ்வரூப உற்சவம்

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருப்பள்ளியறை விஸ்வரூப உற்சவம்

Update: 2023-01-23 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் மற்றும் ராப்பத்து உற்சவம் கடந்த 12-ந் தேதி வரை நடைபெற்றது. மறுநாள் 13-ந் தேதி தாயார் உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.இந்த நிலையில் நேற்று திருப்பள்ளியறை கண்ணாடி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கண்ணாடி திருப்பள்ளியறையில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிவுடன் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்