ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரியில் 2-வது சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.;

Update:2023-09-25 02:00 IST

ஊட்டி

நீலகிரியில் 2-வது சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

2-வது சீசன்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 2-வது சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது. இதையொட்டி நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக மலைரெயிலில் கூட்டம் அதிகரித்து இருந்தது.

படகு சவாரி

இது தவிர சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ரோஜா பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. குறிப்பாக சூழல் சுற்றுலா நகரமான அவலாஞ்சியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

அடுத்த வாரம் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்குவதால் சுற்றுலா பயணிகளை வருகை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்