பரமத்தி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி

Update:2023-03-18 00:15 IST

பரமத்திவேலூர்:

பரமத்தி வட்டார வளமையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா, ஒருங்கிணைப்பாளர்கள் ராமேஷ், ராஜா ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர். கருத்தாளர்களாக கிராம சுகாதார செவிலியர் சிந்தாமணி, அங்கன்வாடி பணியாளர் விஜயலட்சுமி, இயன்முறை மருத்துவர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு சரியான உடல் சமநிலை மற்றும் குழந்தைகளை தூக்கி செல்லும் முறைகள், ஆரம்பகால குறைபாடுகளை அடையாளம் கண்டு கொள்ளுதல், மருத்துவம் உள்ளடக்கிய கல்வி மையங்களில் வழங்கப்படும் சேவைகள் பற்றி எடுத்துரைத்தனர். சிறப்பு பயிற்றுனர்கள் கவிதா, மகேஷ்வரி மற்றும் பெரியசாமி ஆகியோர் குழந்தைகளுக்கான சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதன் முக்கியத்துவம், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் உதவி உபகரணங்கள் மற்றும் அதன் பராமரிப்பு பற்றிய பேசினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்