முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்;
திருப்பூர்
முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு ஊக்குவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் கடந்த சுதந்திர தின விழாவில் 10 ஆயிரம் முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.7 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட திறன் மேம்பாடு அலுவலகத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் 6 மாத குறுகியகால இலவச பயிற்சிகள், திருப்பூர் அவினாசி ரோடு இந்திராநகர் ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் சார்பில் 60 நாட்கள், 75 நாட்கள் பயிற்சிகள், அவினாசி கைக்காட்டி புதூரில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 3 மாதம் முதல் 7 மாதம் வரை பயிற்சி வகுப்புகள் என மொத்தம் 14 வகையான பயிற்சிகள் நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் நேரிலோ, அல்லது exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.