திருக்கோவிலூர் அருகேடிராக்டரில் மண் கடத்தல்; டிரைவர் கைது
திருக்கோவிலூர் அருகே டிராக்டரில் மண் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டாா்.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டித்தாங்கல் கிராமத்தில் திருக்கோவிலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மண் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தி, டிரைவரிடம் விசாரித்தனர். அதில், மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரான சோழ பாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.