தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி-வால்பாறை அமீது வழங்கினார்

Update:2023-09-05 01:00 IST

வால்பாறை

வால்பாறை பகுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று கோர்ட்டு உத்தரவு வழங்கியதை கொண்டாடும் வகையிலும் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். தோட்ட தொழிற்சங்க அலுவலகத்தில் விழா கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு தோட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள், அ.தி.மு.க.வினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் 1,250 பேருக்கு தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது குடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன் அமீது, தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்