கிராம மக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியல் நடைபெற்றது.;

Update:2023-03-07 01:34 IST

துறையூர் அருகே கோட்டார் ஊராட்சியில் கடந்த 2 மாதங்களாக காவிரி கூட்டுக்குடி நீ்ர் திட்டத்தின் கீழ் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் நேற்று துறையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் காவிரி கூட்டு குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர் ரவிச்சந்திரன், கூடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்