விழுப்புரம் மாணவர்கள் சாதனை

தென்னிந்திய கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை படைத்தனா்.;

Update:2022-08-03 22:04 IST

விழுப்புரம்;

புதுச்சேரியில் தென்னிந்திய அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஜார்ஜ் கார்னேஷன் கிளப் வளாகத்தில் கராத்தே மாஸ்டர் செல்வக்குமாரிடம் பயிற்சி பெற்று வரும் மாணவர்களான ஜெயஸ்ரீ, குருபிரசாத், ஹரிகரன், ஷேக்ஆப்தாப், யோகேஸ்வரன், கமலேஷ், சந்தோஷ், சஞ்சய், விக்னேஸ்வரன், மோனேஷ், பாலகுமாரன், ஷேக்ரிகான், அஷ்ரபி, அப்ஷர்பேகம், காளிதாஸ், ராமன், பூஷணன், நிவாஸ்வாரி, பிரியதர்ஷன், ரீட்டா, ஷர்மிளா, தன்ஷிகா, சுரேஷ், அப்ரிகான், நிஷாந்த், சாதிகா ஆயிஷா ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் கட்டா பிரிவில் 26 மாணவர்களும், கும்தே பிரிவில் 20 மாணவர்களும் கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்று சாதனை படைத்து விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பயிற்சியாளர் செல்வக்குமார், முன்னாள் பயிற்சியாளர் வைத்தியநாதன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்