நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-01-31 19:55 GMT

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

பரவலாக மழை

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டமாக காட்சி அளித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல்லையில் பரவலாக மழை பெய்தது. நேற்று பகலில் அவ்வப்போது வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.

அணைகளில் நீர்மட்டம்

பாபநாசம் அணை நீர்மட்டம் 77.75 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 278 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,005 கன அடியாகவும் உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 80.12 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 86.45 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 95 கன அடியாகவும், வெளியேற்றம் 485 கன அடியாகவும் உள்ளது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அம்பை -4, சேரன்மாதேவி -7, மணிமுத்தாறு -3, நாங்குநேரி -7, பாளையங்கோட்டை -5, பாபநாசம் -6, ராதாபுரம் -5, நெல்லை-1, சேர்வலாறு அணை -4, கன்னடியன் கால்வாய் -4, களக்காடு -15, மூைலக்கரைப்பட்டி -15, மாஞ்சோலை -16, காக்காச்சி -32, நாலுமுக்கு -36, ஊத்து -30. 

Tags:    

மேலும் செய்திகள்