சாலை விபத்தில் தொழிலாளி சாவு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.;

Update:2023-07-31 00:15 IST


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று மாலை, வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கனகநந்தல் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி மணிகண்டன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்