ஆடு திருடிய வாலிபர் கைது

அரக்கோணம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது;

Update:2022-08-12 23:50 IST

குருவராஜபேட்டை, சாலை, அமீர் பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அமீர் பேட்டையில் நடந்த வாகன சோதனையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆடுகளை எடுத்து வந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியை சார்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விஜய் (வயது 22) என்பதும், குருவராஜபேட்டை அடுத்த நந்தி வேடந்தாங்கல் பகுதியில் இருந்து இரண்டு ஆடுகளை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்