தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-08-20 23:35 IST

தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதியின் மகன் குங்குமராஜ் (வயது 24). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு சம்பளம் குறைவாக இருந்ததால் வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டுமென கூறியுள்ளார்.

அதற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குங்குமராஜ் நேற்றுமுன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கும்குமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்