குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா தாக்கியது மிருகத்தனமான செயல் - உக்ரைன் அதிபர்

ரஷிய படைகள் குடியிருப்பு பகுதிகளை தாக்கத் தொடங்கியிருப்பது மிருகத்தனமான செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.

Update: 2022-02-27 09:12 GMT
கீவ், 

ரஷிய படைகள் குடியிருப்பு பகுதிகளை தாக்கத் தொடங்கியிருப்பது மிருகத்தனமான செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேலும் கூறும் போது, “ பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா கூறியிருந்தது அப்பட்டமான பொய். 

போர் தொடங்கியது முதல் தற்போது வரை ரஷ்ய படைகள் உக்ரைன் மக்களின் உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது.மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

முன்னதாக, ராணுவ தளங்கள், ராணுவ உட்கட்டமைப்பு, உளவு அமைப்புகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாக ரஷியா ராணுவம் கூறிய நிலையில், உக்ரைன் அதிபர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  ரஷிய ராணுவப்படையினருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில இடங்களில் ரஷிய வீரர்களை தாக்கி, ஆயுதங்களையும் உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் செய்திகள்