40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் விலைவாசி உயர்வு விகிதம் அதிகரிப்பு

அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் மார்ச் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Update: 2022-04-13 16:13 GMT
வாஷிங்டன்,

உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே விலைவாசி உயர்வு விகிதம் மிக குறைவான அளவிலேயே இருந்து வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் விலைவாசி உயர்வு விகிதம் 2% அளவில் இருந்து வந்தது.

அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க வட்டி விகிதத்தை 0.25% ஆக அமெரிக்க ரிசர்வ் வங்கி குறைத்தது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த பட்ஜெட் பற்றாக்குறைகளை அதிகரித்து அதன் மூலம் சுமார் 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நிதி தொகுப்புகளை டிரம்ப் மற்றும் பைடன் அரசுகள் செயல்படுத்தின. 

இதன் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் 6% வளர்ச்சியை எட்டியது. இதனால் விலைவாசி உயர்வு விகிதம் 2021 செப்டம்பரில் 5.4% ஆகவும், 2022 ஜனவரியில் 7.5% ஆகவும், 2022 மார்ச்சில் 8.5% ஆகவும் உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான சதவீதம் ஆகும். இதற்கிடையில் ஜோ பைடன் அரசின் தவறான கொள்கைகள் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று குடியரசு கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

மேலும் செய்திகள்