ஜப்பானில் 8 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஜப்பானில் 8 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.;

Update:2025-06-28 03:55 IST

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு தகாஹிரோ ஷிரைசி என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 9 பேரை கொலை செய்தார். இதில் 8 இளம்பெண்களும் அடங்குவர். அவர்களை பலாத்காரம் செய்து பின்னர் துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் 2020-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையே 60 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட குற்றத்துக்கு தவறாக தண்டனை அனுபவித்து வந்த இவாவோ ஹகமடா என்பவர் கடந்த ஆண்டு மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் பிறகு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனால் தகாஹிரோவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவியது. இந்தநிலையில் டோக்கியோ தடுப்பு காவல் நிலையத்தில் தகாஹிரோ நேற்று ரகசியமாக தூக்கிலிடப்பட்டார். அந்த நாட்டில் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.

Tags:    

மேலும் செய்திகள்