ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு டென்மார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்;

Update:2022-05-03 16:40 IST
Image Courtesy : ANI

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி ஜெர்மனிக்கு சென்றார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்ற பிரதமர் மோடிக்கு ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவை வலுப்படுத்துதல், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். இதனை தொடர்ந்து ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில்,, தனது ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று டென்மார்க்  சென்றார். டென்மார்க் சென்ற பிரதமர் மோடியை  கோபன்ஹேகன் விமான நிலையத்தில் .அந்நாட்டு பிரதமர் மிட்டீ ஃபிரிடிக்சன் வரவேற்றார் .

மேலும் செய்திகள்