4 குழந்தைகளை பலி வாங்கிய ஈராக் மருத்துவமனை தீ விபத்து

அலட்சியமாக இருந்த மருத்துவமனை அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும்படி ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-01-09 06:29 GMT
கோப்பு படம்

பாக்தாத்:

ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, அடுத்தடுத்த அறைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சிலர் தீப்பிடித்த கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 150 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்த மருத்துவமனை அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும்படி ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்