துருக்கி அதிபராக எர்டோகன் பதவியேற்பு
கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.;
Image Courtesy : AFP
துருக்கி அதிபராக ஏர்டோகன் 3வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். துருக்கியின் பிரதமராகவும் அதிபராகவும் கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஏர்டோகன் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, தலைநகர் அங்காராவில் நடைபெற்ற விழாவில் எர்டோகன் துருக்கி அதிபராக பதவியேற்று கொண்டார். முன்னதாக கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.