ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - 4 பேர் பலி
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.;
காபுல்,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பிற்கு ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இது இருநாட்டு மோதலாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்று பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படையினர் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆப்கானியர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.