சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலி: கவர்னர் உள்பட 11 பேர் படுகாயம்

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலியாகினர். மேலும் கவர்னர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-03-15 22:57 GMT

மொகாதிசு,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் ஜூபலாந்து மாகாணம் பர்டேரா பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த மாளிகைக்குள் திடீரென ஒரு வாகனம் அனுமதியின்றி உள்ளே புகுந்தது.

வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட அந்த வாகனத்தில் இருந்தவர் உள்ளே நுழைந்ததும் தன்னைத்தானே வெடிக்க செய்தார். இதில் அந்த வாகனத்தில் இருந்தவர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இந்த தற்கொலை படை தாக்குதலில் ஜூபலாந்து மாகாண கவர்னர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை அரங்கேற்றி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்