அனைத்து டிக்கெட்டுகளையும் மொத்தமாக வாங்கி தியேட்டரில் தனியாக படம் பார்த்த பெண்

எரிக்கா பைதுரி தனது வசதியை காட்டிக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.;

Update:2024-01-12 17:05 IST

மலேசியாவை சேர்ந்தவர் எரிக்கா பைதுரி. பணக்கார பெண்ணான இவர் டிக்-டாக் தளத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தியேட்டரில் அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்ப்பது போன்று காட்சி இருந்தது. மேலும் அவர் தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி அணிந்திருந்த காட்சிகளும் அதில் இருந்தன.

வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில், 'நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள். எனவே நாங்கள் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம்' என குறிப்பிட்டிருந்தார்.

அந்த மினி தியேட்டரில் 10 வரிசை இருக்கைகள் இருப்பது வீடியோவில் தெரிகிறது. ஒவ்வொரு வரிசையிலும் 16 இருக்கைகள் இருந்தன. அந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன.

இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எரிக்கா பைதுரியின் இந்த செயல் பற்றி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அவர் தனது வசதியை காட்டிக்கொள்வதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்