அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: பலர் உயிரிழப்பு என தகவல்
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலர் உயிரிழப்பு என தகவல் வெளியாகி உள்ளது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் உயிரிழப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.