செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாசா

செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்யும் விண்கலத்தை நாசா நேற்று விண்ணுக்கு அனுப்பியது.

Update: 2023-10-19 20:23 GMT

வாஷிங்டன்,

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்பட பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தொடர்ந்து பல ஆய்வுகளை செய்கின்றது. அந்தவகையில் 2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. எனவே செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்ய இன்ஜெனியுட்டி என பெயரிடப்பட்ட விண்கலத்தை நேற்று நாசா அனுப்பியது. 63-வது பயணமான இந்த விண்கலம் அங்கு சுமார் 90 வினாடிகள் வரை பறக்க உள்ளது.

இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படும். பின்னர் அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன்பிறகு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்