#லைவ் அப்டேட்ஸ்: போரில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த ரஷியா - உக்ரைன் தகவல்

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

Update: 2022-05-19 04:42 GMT
உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
Live Updates
2022-05-19 10:03 GMT

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில், இதுவரை 28 ஆயிரத்து 300 ரஷிய நாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர், கடந்த ஒரு நாளில் 400 பேரை ரஷியா இழந்துள்ளது என உக்ரைன் கூறுகிறது. மேலும், 1,251 டாங்குகள், 3,043 கவச வாகனங்கள், 586 பீரங்கி அமைப்புகள், 199 ராக்கெட்டுகள், 91 வான் பாதுகாப்பு அமைப்புகள், 202 போர் விமானங்கள், 167 ஹெலிகாப்டர்கள் உள்ளிடட ஏராளமான தளவாடங்களையும் உக்ரைன் அழித்துள்ளதாக அந்த நாட்டின் ராணுவம் கூறுகிறது. இந்தப் போரில் உக்ரைனில் 3,752 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

2022-05-19 08:08 GMT

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியபோது, அதன் தலைநகர் கீவ்வில் இருந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. தூதரக அதிகாரிகள் அனைவரும் தாயகம் திரும்பினர். இந்நிலையில் தற்போது 3 மாதங்களுக்கு பிறகு கீவ்வில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரம் மீதான தாக்குதலை ரஷிய சில வாரங்களாக நிறுத்திய நிலையில், அமெரிக்க தூதரகம் மீண்டும் செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2022-05-19 07:25 GMT

மே 16 முதல் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் சரணடைந்த 900க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் விசாரணைக்கு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களில் படுகாயங்களுடன் 51 பேர் உள்பட மொத்தம் 959 உக்ரைன் வீரர்கள் சரணடைந்ததாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.

எஃகு ஆலையில் சரணடைந்த உக்ரேனிய வீரர்கள் மோசமாக நடத்தப்படக்கூடாது என்றும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உடனடியாக அணுக வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

2022-05-19 04:57 GMT

இதுகு றித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸ் கூறியதாவது:-

ரஷியாவின் போரால் விலைவாசி உயர்வு காரணமாக ஏழை நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையை மோசமாக்கியுள்ளது.உக்ரைனின் ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்றால், சில நாடுகள் நீண்டகாலப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த போர் காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்களின் விளைவுகளுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை உணவுப் பாதுகாப்பின்மைக்கு தள்ளும் அபாயத்தைகொடுக்கும். அதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு, வெகுஜன பசி மற்றும் பஞ்சம் ஏற்படும் என கூறினார்.உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு உலகில் உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.

2022-05-19 04:44 GMT

கீவ்,

போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்