இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேற தடை நீட்டிப்பு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் உள்ளார்.

Update: 2022-08-01 13:01 GMT

கொழும்பு,

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல தடை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த தடையை மேலும் 2 நாட்கள் நீட்டித்து இலங்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது .

முன்னதாக, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக ராஜபக்சே சகோதர்களே காரணம் என்று இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராஜபக்சே சகோதரர்கள் பதவியில் இருந்து விலகினர். கோத்தபய ராஜபக்சே நாட்டில் இருந்து வெளியேறி சிங்கப்பூரில் இருந்து வருகிறார். இந்த சூழலில் தான், மகிந்த ராஜபக்சே வெளியேற தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்