ஐநா அகதிகள் தலைவர் உக்ரைனுக்கு பயணம்
ஐநா அகதிகள் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி உக்ரைனின் இர்பின் மற்றும் புச்சா ஆகிய நகரங்களுக்கு சென்று பார்வையிட்டார்.;
Image Courtesy: AFP
உக்ரைன்,
ஐநா அகதிகள் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் அங்குள்ள இர்பின் மற்றும் புச்சா ஆகிய நகரங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
இது குறித்து ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில்,
உக்ரைனில் ஆயிரக்கணக்கான வீடுகளை ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் உக்ரைன் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது.
ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தன் காரணமாக உலகளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.