வைணவ தலத்தில் தைப்பூசம்

தைப்பூசத் திருநாள் சிவனுக்கும், முருகனுக்கும் உகந்ததாகும். ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு வைணவத் தலத்தில் மட்டும் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

Update: 2017-02-07 10:10 GMT
தைப்பூசத் திருநாள் சிவனுக்கும், முருகனுக்கும் உகந்ததாகும். ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு வைணவத் தலத்தில் மட்டும் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த திருத்தலம் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலாகும்.

இந்த தலத்தில் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தாள், காவேரி அன்னை. அவளுக்கு, தை மாதம் பூச நட்சத்திரத்தன்றுதான், நேராக காட்சி கொடுத்து வரமளித்தார் திருமால். எனவே இங்கு 10 நாள் உற்சவம் நடக்கிறது. இதில் முதல் எட்டு நாட்களுக்கு தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் எல்லா வாகனங்களிலும் சுவாமி உற்சவம் நடக்கும். ஒன்பதாம் நாளான தைப்பூசத்தன்று பெரிய தேரில் சுவாமி ஊர்வலம் வருவார்.

மேலும் செய்திகள்