மூன்று வகை நட்சத்திரம்

தலையற்ற நட்சத்திரங்கள்: கார்த்திகை, உத்ரம், உத்ராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும் மீதம் மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும்.

Update: 2017-04-13 09:20 GMT
தலையற்ற நட்சத்திரங்கள்: கார்த்திகை, உத்ரம், உத்ராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும் மீதம் மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும்.

உடலற்ற நட்சத்திரங்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவற்றிற்கு முதல் இரண்டு பாதங்கள் ஒரு ராசியிலும், அடுத்த 2 பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும்.

காலற்ற நட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களுக்கு முதல் 3 பாதங்கள் ஒரு ராசியிலும், கடைசி பாதம் மட்டும் அடுத்த ராசியிலும் இருக்கும்.

மேற்கண்ட நட்சத்திரங்களில் சில காரியங்கள் செய்யலாம்; சில காரியங்கள் செய்யக்கூடாது. குறிப்பாக மனை முகூர்த்தம் வைக்கக்கூடாது. தூரதேசப் பயணங்கள் செல்லக்கூடாது.

குறிப்பாக தலையற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், தலைப் பகுதியிலுள்ள நோய்களுக்கும் கண், காது, மூக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய் குணமாக மருத்துவரை முதன் முதலில் அணுகும் நாளாக இருக்கக்கூடாது. பொதுநலத்தில் உள்ளவர்கள் தலைமைப் பொறுப்பேற்கும் நாட்களில் இந்த நட்சத்திரங்கள் வருமானால் அந்த பொறுப்பு நிலையாக இருக்காது.
அடுத்து உடலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், உடல் வலி, ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல முதன் முதலில் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது நலன் தராது.

காலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், உத்தியோகம் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டவர்களுக்கு அது அனுகூலமாக இருக்காது. கால் வலி, காலில் உள்ள நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அகல மருத்துவரை முதன் முதலில் சந்திப்பதற்கு ஏற்ற நாள் இதுவல்ல. குணமாவதில் தாமதம் ஏற்படும்.

மேலும் செய்திகள்