ஆன்மிகம்
வாரம் ஒரு அதிசயம்

கோவிலின் பின்புறம் உள்ள மலையைப் பார்த்தால், பெருமாள் பள்ளிகொண்ட தோற்றத்தில் இருப்பது போல் தெரியும்.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், கட்டழகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராஜப் பெருமாளைத் தரிசனம் செய்யலாம். ஆலயத்தை அடைவதற்கு மலையின் மீது அமைந்த 247 படிகளை கடக்க வேண்டும். இந்த படிகள், தமிழ் எழுத்துகளான 247–ஐ நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டவை. இந்த மலை மீது ‘சிலம்பு ஊற்று’ என்ற தீர்த்தம் இருக்கிறது. இது அங்குள்ள நாவல் மரப் பொந்தில் இருந்து உற்பத்தியாவது அதிசயமான ஒன்றாகும். கோவிலின் பின்புறம் உள்ள மலையைப் பார்த்தால், பெருமாள் பள்ளிகொண்ட தோற்றத்தில் இருப்பது போல் தெரியும்.