ஆன்மிகம்
வாரம் ஒரு அதிசயம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ளது சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ளது சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி ஜாத மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) காட்சி தருவது அதிசயிக்கத்தக்க திருக்காட்சியாகும். இந்த ஆலயத்தில்தான் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, வள்ளி–தெய்வானை இருவரும், அமிர்தவல்லி– சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் இயற்றிய சிறப்பு மிகு ஆலயம் இது. இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.