ஆன்மிகத் துளிகள்

சிந்தனையில் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.

Update: 2017-10-10 00:45 GMT
ஆனந்தம்

சீடன் ஆசிரியரிடம் சரணடைகிறான். ஆகவே அவனுக்கு என்று இனித் தனியாக ஒன்றும் இல்லை என்பது அதன் பொருள். சரணாகதி முழுமை பெற்றால் தனித்துவம் நீங்கி, துன்பத்திற்கான இடமே இல்லை. நித்திய பொருளான ஆனந்தமே வெளிப்படுகிறது.

–ரமணர்.

தவறு

சிந்தனையில் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

–விவேகானந்தர்.

கனவு

கனவுகள் முற்றிலும் வேறு வகையானவை. அவற்றுக்கு விளக்கம் தருவது என்பது கடினமான ஒன்றாகும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும், அவனுக்கே உரிய கனவுச் சின்னங் களைக் கொண்ட தனிக் கனவுகள் உண்டு.

–ஸ்ரீஅன்னை.

மேலும் செய்திகள்