நவக்கிரக பைரவர் வழிபாடு

நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பைரவர் பிராண தேவதையாக இருக்கிறார்.

Update: 2018-06-28 07:39 GMT
நவக்கிரகங்களின் வழிபாடு அவசியமானது. நவக்கிரகங்களின் தோஷங்களைப் போக்கும் ஆற்றல் பைரவருக்கும் உண்டு. நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பைரவர் பிராண தேவதையாக இருக்கிறார்.

சூரியனின் பிராண தேவதை சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர், செவ்வாய் கிரகத்தின் பிராண தேவதை சண்ட பைரவர், புதனின் பிராண தேவதை உன்மத்த பைரவர், குரு பகவானுக்கு அசிதாங்க பைரவரும், சுக்ரனுக்கு ருரு பைரவரும், சனி பகவானுக்கு குரோதன பைரவரும், ராகுவுக்கு சம்ஹார பைரவரும், கேதுவுக்கு பீஷண பைரவரும் பிராண தேவதைகளாக இருக்கிறார்கள்.

* சூரிய திசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ, அவர்கள் பைரவரின் சன்னிதியில் நின்று சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரிப்பது நன்மை தரும்

‘ஓம் பைரவாய வித்மஹே

ஆகர்ஷணாய தீமஹி

தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்’ என்ற இந்த மந்திரத்தை சூரிய திசை முடியும் வரை கூறி வந்தால் நடப்பவையாவும் நன்மையாக முடியும்.

* சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்.

‘ஓம் கால தண்டாய வித்மஹே

வஜ்ர வீராய தீமஹி

தந்நோஹ்: கபால பைரவ ப்ரசோதயாத்’

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும். இதன் மூலம் சந்திர திசை யோக திசையாக இருந்தால், மேலும் யோகங்கள் அதிகரிக்கும். சந்திர திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.

* செவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

‘ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோஹ்: சண்ட பைரவ ப்ரசோதயாத்’

இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9-ன் மடங்குகளில் ஜெபித்து வர வேண்டும். இதனால், செவ்வாயின் திசை யோக திசையாக இருந்தால் கூடுதல் யோகம் வாய்க்கும். செவ்வாயின் திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.

* புதன் கிரகத்தின் பிராண தேவதை உன்மத்த பைரவர்.

‘ஓம் மஹா மந்த்ராய வித்மஹே

வராஹி மனோகராய தீமஹி

தந்நோஹ்: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

* நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்.

‘ஓம் ஞான தேவாய வித்மஹே

வித்யா ராஜாய தீமஹி

தந்நோஹ்: அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்’ என்ற இந்த காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து வந்தால், யோகங்கள் அதிகரித்து, துன்பங்கள் விலகும்.

* நவக்கிரகங்களில் மற்றொரு சுப கிரகமாக திகழ்பவர் சுக்ரன். இவரது பிராண தேவதை, ருரு பைரவர்.

‘ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே

டங்கேஷாய தீமஹி

தந்நோஹ்: ருருபைரவ ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.

* சனி பகவானின் பிராண தேவதையாக விளங்குபவர் குரோதன பைரவர்.

‘ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி

தந்நோஹ்: குரோதன பைரவ ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான வாழ்வமையும். துன்பங்கள் விலகி ஓடும்.

* நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்குவது ராகு. இதன் பிராண தேவதை சம்ஹார பைரவர் ஆகும்.

‘ஓம் மங்களேஷாய வித்மஹே

சண்டிகாப்ரியாய தீமஹி

தந்நோஹ்: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இன்னல்கள் அகலும்.

* நவக்கிரகங்களில் மற்றொரு நிழல் கிரகமாக இருப்பவர் கேது பகவான். இவரது பிராண தேவதை பீஷண பைரவர்.

‘ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி

தந்நோஹ்: பீஷணபைரவ ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை 9 முறை அல்லது ஒன்பதில் மடங்குகளில் பாராணயம் செய்து வந்தால் துன்பங்கள் அனைத்து விலகி ஓடும். யோகங்கள் வந்து சேரும். 

மேலும் செய்திகள்