எரியோட்டில் கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பு

வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் கோட்டை முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலின் முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்துவதற்காக சிறிய அளவில் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-12-22 22:19 GMT
வேடசந்தூர்,

பவுர்ணமியையொட்டி நேற்று கோட்டை முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது மதியம் 1.45 மணியளவில் விளக்கேற்றும் மாடத்துக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்து படம் எடுத்து ஆடியது.

அப்போது பக்தர்கள் அந்த பாம்புக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை. இது பற்றிய தகவல் பரவியதும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி மஞ்சள் தூவி பயபக்தியுடன் வழிபாடு செய்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு அந்த பாம்பு தானாக வெளியேறி காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது.

மேலும் செய்திகள்