தேசிய கூடைப்பந்து போட்டி: தென்மேற்கு ரெயில்வே அணி வெற்றி

கோவையில் நடைபெறும் தேசிய கூடைப்பந்து போட்டியில் பெண்களுக்கான பிரிவில் தென்மேற்கு ரெயில்வே அணி வெற்றி பெற்றது.

Update: 2018-05-27 22:30 GMT
கோவை,

கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில், அகில இந்திய அளவிலான 53-வது நாச்சிமுத்து ஆண்கள் கோப்பை மற்றும் 17-வது சி.ஆர்.ஐ. பம்ப் பெண்கள் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாள் போட்டி நடைபெற்றது. இதில், ஆண்கள் பிரிவில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து சுங்க இலாகா அணி மோதியது. இதில் பஞ்சாப் போலீஸ் அணி 53 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. சுங்க இலாகா அணி 51 புள்ளிகள் எடுத்தது.

பெண்கள் அணியின் முதல் போட்டியில் தென்மேற்கு ரெயில்வே அணியை எதிர்த்து அரைஸ் ஸ்டீல்ஸ் அணி விளையாடியது. இதில் தென்மேற்கு ரெயில்வே அணி 78 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. அரைஸ் ஸ்டீல்ஸ் அணி 59 புள்ளிகள் பெற்றது.

பெண்கள் 2-வது பிரிவு போட்டியில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்வாரிய அணி 79 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. கோவை அணி 20 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.

ஆண்கள் 2-வது போட்டியில் ஏ.எஸ்.சி. அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் ஏ.எஸ்.சி. அணி 85 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி 54 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.

ஆண்களுக்கான 3-வது போட்டியில் இந்திய விமானப்படை அணியும் அரைஸ் ஸ்டீல்ஸ் அணியும் மோதின. இதில் இந்திய விமானப்படை அணி 89 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. அரைஸ் ஸ்டீல்ஸ் அணி 59 புள்ளிகள் பெற்றது.

மேலும் செய்திகள்