தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் :6 வது முறையாக பட்டம் வென்றது இந்திய அணி

106-41 என்ற கணக்கில் வங்காளதேச அணியை வீழ்த்தி 65 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

Update: 2021-11-19 09:43 GMT
டாகா ,

தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் டாக்காவில் உள்ள ஷாஹீத் சுஹ்ரவர்தி உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம்  தொடங்கியது. இந்தியா ,மாலத்தீவு , இலங்கை , வங்காளதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

லீக் போட்டியில் மாலத்தீவு , இலங்கை , வங்காளதேசம் என மூன்று அணிகளையும் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நிறைவு செய்த இந்திய அணி இறுதி போட்டியில்  வங்காளதேச அணியுடன் இன்று மோதியது.  இறுதி போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதியில் 106-41 என்ற கணக்கில் வங்காளதேச அணியை வீழ்த்தி 65 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 6-வது முறையாக தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்  பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்