கால்பந்து ஜாம்பவான் பீலே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

பிரபல கால்பந்து ஜாம்பவானான பீலே தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

Update: 2022-12-03 16:37 GMT



பிரேசிலியா,


தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 81). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறிய கட்டி அகற்றப்பட்டது.

இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா என்ற பகுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நலம் தேறாமல் தொடர்ந்து இருந்து வந்தது. இதனை தொடர்ந்து, அவரை மருத்துவமனையின் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதுபோன்ற சிகிச்சையானது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய் மற்றும் வியாதிகளுக்கு அளிக்கப்படும்.

கடந்த 1956ம் ஆண்டு தனது 15-வது வயதில் கால்பந்து விளையாட்டில் இறங்கி தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர். இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்களையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.


உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். தனது அணிக்காக பீலே 643 கோல்களை அடித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்