சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் பென்ஜிமா ஓய்வு

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஜிமா ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.;

Update:2022-12-20 03:53 IST

image courtesy: Karim Benzema twitter via ANI

பாரீஸ்,

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி முன்கள வீரர்களில் ஒருவரான கரீம் பென்ஜிமா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் நேற்று அறிவித்தார்.

35 வயதான பென்ஜிமா கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் கடைசி நேரத்தில் அணியின் இருந்து விலகினார்.

2007-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான பென்ஜிமா 97 போட்டிகளில் ஆடி 37 கோல்கள் அடித்துள்ளார். அவர் இந்த ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்