ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி அபார வெற்றி

பெங்களூருவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின.

Update: 2024-04-11 16:15 GMT

image courtesy: Indian Super League twitter

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டி விட்ட நிலையில் 6-வது மற்றும் கடைசி அணியாக சென்னையின் எப்.சி. (27 புள்ளி) நேற்று பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது.

இந்த நிலையில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில், முதல் பாதியில் ஹெக்டர் யுஸ்தே ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து இரண்டாவது பாதியில் மன்வீர் சிங் ஆட்டத்தின் 51-வது நிமிடத்திலும், அனிருத் 54-வது நிமிடத்திலும், அர்மாண்டோ 59-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

பெங்களூரு அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்