ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பெங்களூரு அணியை வீழ்த்தி கோவா வெற்றி

கோவாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி. கோவா - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

Update: 2024-03-14 17:29 GMT

image courtesy: FC Goa twitter

கோவா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி. கோவா - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சார்பில் ஷிவால்டோ ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கோவா அணி சார்பில் ஓடெய் ஆட்டத்தின் 22-வது நிமிடத்திலும் போரிஸ் சிங் ஆட்டத்தின் 81-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் எப்.சி. கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்