ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கோவா - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

கோவாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி. கோவா - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Update: 2024-03-14 02:01 GMT

கோவா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி. கோவா - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதுவரை 18 ஆட்டங்களில் விளையாடியுள்ள எப்.சி. கோவா அணி 9 வெற்றி, 6 டிரா 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதே வேளையில், 18 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு எப்.சி. அணி 5 வெற்றி, 6 டிரா, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்